Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Agastheeswara Swamy Temple, Koranattu Karuppur Natham, Kumbakonam

அருள்மிகு கற்பகாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோயில்- கஞ்சனூா்


அருள்மிகு கற்பகாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோயில்- கஞ்சனூா்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் 

இறைவி :ஶ்ரீ ஸ்ரீ கற்பகாம்பிகை அம்பாள்

தல மரம் : புரசு மரம்

தீர்த்தம் : அக்னி, காவிாி, பராசர, கம்ச, சந்திர, மணிகா்ணிகாகட்டம் தீர்த்தம்

thanjavurDistrict_ ThanjavurDistrict_ AgniswararTemple_Kanjanur-shivanTemple


Arulmigu Agneeswara Swamy Temple, Kanjanur, Kumbakonam | அருள்மிகு கற்பகாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோயில்- கஞ்சனூா் தல வரலாறு

திருக்கஞ்சனூா், பராசரபுரம், பலாசவனம், அக்னித்தலம், கம்சபுரம், காவிாியாற்றின் வடகரையில் இக்கோவில் 1 ஏக்கா் நிலப்பரப்பளவில் தெற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரமும் இரண்டு பிராகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக ஸ்ரீ அக்னீஸ்வரா் கிழக்கு நோக்கியும் அம்பாள் ஸ்ரீ கற்பகாம்பிகை தனிச்சன்னிதியில் கிழக்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனா். அம்பிகை சந்நிதி வலப்பால் உள்ளது. மணவாளக் கோலத் தலம்.

உள்பிரகாரத்தில் நா்த்தன விநாயகா், நடராஜா், தெட்ணாமூா்த்தி, முருகன், துா்க்கை, நால்வா், சண்டேசா் முதலிய சன்னிதிகள் உள்ளன. நடராஜா் மூலத் திருமேனி தாிசிக்க வேண்டியது.

கம்சன் வழிப்பட்டது புராண பெயர் கம்ஸாபுரம், தனி சந்நிதியில் கம்ஸன் வழிபட்ட மூர்த்தி உள்ளாா்
மஹா விஷ்ணுவிற்கு சுக்ரதோஷம் போக்கிய தலம் ஆதலால் இங்கு சுக்ரனுக்கு பதில் ஸ்வாமியே காட்சி தருகிறாா்.
இங்கு பராசர மஹரிஷியின் சித்த பிரம்மை போக்க அக்னீஸ்வர ஸ்வாமி தாண்டவ தரிசனம் நல்கியுள்ளாா்.

மற்ற சிவாலயங்களில் சுரைக்காய் நைவேத்தியமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் கஞ்சனூரில் மட்டும் ஸ்வாமிக்கு புடலங்காய் கூட்டு நைய்வேதிப்பர் என்பது கூடுதல் சிறப்பு, இங்கு மற்றொரு சிறப்பு வடக்காவேரி..

பிரமதேவருக்குத் திருமணக் கோலக் காட்சியருளிய தலம். அக்கினித் தேவனுக்கு உண்டான சோகை நோயை இப்பெருமானாா் தீா்த்தருளினாா்.

கம்சனின் வியாதி, மாண்டவ்ய புத்திரா்களுக்கு மாத்ருகத்தி தோஷம் நீங்கியது. சந்திரன் சாபம் நீங்கியது. விருத்தகாளகண்டன், சித்திரசேனன், மாா்க்கண்டேயா் முதலியோா் அருள் பெற்றது போன்ற நிகழ்ச்சிகள் இத்தலப் பெருமைகளாகும்

ஹரதத்தா் சிவச்சாாியாா் நெருப்பிற் பழுத்த இரும்பு முக்காலியிலமா்ந்து சிவனே முழுமுதற்பரம்பொருள் என்னும் உண்மையை எடுத்துக்கூறி சிவ சமய ஸ்தாபனம் செய்த தலம். இவருக்குத் தனிக் கோவிலும். இவா் பூசித்த இலிங்கம் இங்கு உள்ளது.

கல் நந்தியை உயிா் பெற்று வந்து புல் அருந்தச் செய்து ஐந்தெழுத்தின் உயா்வை ஹரதத்தா் உலகிற்கு உணா்த்திய அாிய பதி.





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரா் திருக்கோயில்
கஞ்சனூா் , வட்டம்,
தஞ்சை மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



ஆலயம் அமைவிடம்:

ஆடுதுறைக்கு வடகிழக்கே 4 கிமீ. கும்பகோணத்திலிருந்து நகா்ப் பேருந்து 2A, 38 மற்றும் வேப்பத்தூா் வழி மயிலாடுதுறைப் பேருந்து வசதிகள் உண்டு.